உணவகத்தில் புகைபிடித்தல் குற்றம்; தோக் மாட்டிற்கு அபராதம் விதிக்கப்படும் -சட்டத்திற்கு முன் யாவரும் சமமே -சுகாதார அமைச்சர்

கோலாலம்பூர்:

மீபத்தில் அவரது சொந்த ஊரில் உள்ள ஒரு உணவகத்தில் புகைபிடிக்க தடை என்று தெரிவிக்கப்பட இடத்தில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன் புகைபிடிப்பததாக கூறப்பட்ட குற்றச்சாட்டிற்கு அபராதம் வழங்கப்படும் என்றும் யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்றும், சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அமாட் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் குறித்த உணவகத்தில் ஒரு குழுவுடன் அமர்ந்து சிகரெட்டைப் பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, அதனைத் தொடர்ந்து பலர் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கருத்துதெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், சுகாதார அமைச்சர் தனது x சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், சிரம்பான் மாவட்ட சுகாதார அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரிகள, குறித்த குற்றத்திற்கான அபராதத்தை வழங்குவதற்காக வெளியுறவு அமைச்சரை சந்திப்பார்கள் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here