இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு சில நாட்களுக்கு முன்பு கடுமையாக குறைக்கப்பட்டது. கடந்த தேர்தலில் நாடு முழுவதும் பெரும் தோல்வியை சந்தித்த பின்னரும் அவரது பாதுகாப்புக்காக அதிக போலீசாரும், அதிக பணச்செலவும் இருப்பது குறித்து சர்ச்சைகள் எழுந்தன.
இதன்வழி அனுர அரசாங்கம் மகிந்தவின் பாதுகாப்பு கடமையிலிருந்து 116 போலீசாரை உடனடியாக விடுவித்து, அவர்களை மக்களுக்கு சேவை செய்யும் பல பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இது குறித்து மகிந்த தரப்பில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.
போரை வெற்றிகொண்ட ஒரு தலைவரின் பாதுகாப்பை இப்படிக்கு குறைப்பதா, அவருக்கு இன்னும் உயிர் அச்சுறுத்தல் உள்ள நிலையில், பாதுகாப்பை நீக்குவதா? இதில் ஏதோ சதி இருக்கிறது என சில அரசியல்வாதிகள் கோபத்தில் கொந்தளித்தனர்.
இப்போது இலங்கையில் எல்லா இனத்தவர்களும், தாம் பாதுகாப்பாக இருப்பதாகவே உணர்கிறார்கள், ஆனால், அவர் மட்டும் தனது பாதுகாப்பு குறித்து அதிகம் பயப்படுவது ஏன்? என சமூக வலைத்தளங்களில் மாறுபட்ட விமர்சனங்களும் எழுந்துள்ளன.