தரமற்ற 90 மருந்துகள் குறித்து எச்சரிக்கை

கிருமித்தொற்று, சத்துக்குறைபாடு, சளித்தொற்று, சீரணக்கோளாறு போன்ற பாதிப்புகளுக்கான 90 மாத்திரை, மருந்துகள் தரமற்றவை என்று இந்தியாவின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வின்போது போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

பெரும்பாலான தரமற்ற மருந்துகள் இமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை என்று தெரியவந்தது. இதுபோன்ற மருந்து, மாத்திரைகளைத் தயார் செய்து விற்பனை செய்துவரும் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் மீது மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவுசெய்துள்ளது.

அதன் விவரங்கள் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in/ என்ற இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here