பிரதமர் துறையின் சிறப்பு ஒதுக்கீடு; 90க்கும் மேற்பட்ட ஆலயங்களுக்கு RM3,170,000 பகிர்ந்தளிப்பு

கோலாலம்பூர்:

பிரதமர் துறையின் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 90க்கும் மேற்பட்ட ஆலயங்களுக்கு RM3,170,000 நிதி இன்று பகிர்ந்தளிக்கப்பட்டது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நேரடி மானியத்தின் கீழ் இந்த இந்த உதவி நிதி வழங்கப்பட்டது என்றும், மலேசிய வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய மானியம் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் இராமகிருஷ்ணன் கூறினார்.

இந்த நிதி ஆலய நிர்வாகங்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று நம்புவதாகவும், அதேநேரம் இவ்வாறான வரலாற்று சிறப்புமிக்க உதவியை ஆலயங்களுக்கு வழங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here