பேராக்:
பேராக் தெங்கா அருகே பாரிட் 4 என்ற இடத்தில் நீர்ப்பாசன கால்வாயில் மூழ்கி ஏழு வயது சிறுவன் உயிரிழந்தான்.
நேற்று திங்கள்கிழமை (டிசம்பர் 23) மாலை சுமார் 5.45 மணியளவில், பாரிட் 4ல் உள்ள நீர்ப்பாசனக் கால்வாயின் கரையில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் குறித்த சிறுவன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது என்று, பேராக் தெங்கா மாவட்ட காவல்துறை தலைவர், ஹபிஸுல் ஹெல்மி ஹம்சா கூறினார்.
பாதிக்கப்பட்ட முஹமட் அம்மார் ரசிஃப் , செக்கோலா கெபாங்சான் பாசீர் காஜாவில் ஆண்டு 1 இல் கல்வி பயிலும் மாணவன் என்று கூறிய அவர், இன்று காலை ஸ்ரீ இஸ்கண்டர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், இறப்புக்கான காரணம், “நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட நுரையீரல் வீக்கம்” என்று உறுதி செய்யப்பட்டது என்றார்.