கோலாலம்பூர்:
மலேசியாவில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா மற்றும் அவரது துணைவியார் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் ஆகியோர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இத்தகைய கொண்டாட்டங்கள் நாட்டிலுள்ள பல்வேறு சமூகங்களுக்கு இடையில் மரியாதை, சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் என்று அவர்கள் நம்புவதாக சிலாங்கூர் அரச அலுவலகம் பேஸ்புக்கில் இன்று புதன்கிழமை (டிச. 25) வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக பண்டிகைக் காலங்களில், அலட்சியத்தால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க, சாலையைப் பயன்படுத்துபவர்கள் கவனமாகவும் பொறுப்புடனும் வாகனம் ஓட்ட வேண்டும் என்றும் அரச தம்பதியினர் நினைவூட்டினர்.