கிளந்தானின் ஒன்பது மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு -நீர்பாசன மற்றும் வடிகால் துறை

கோத்தா பாரு:

ரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) தொடங்கி பெய்யும் தொடர்மழை காரணமாக மூன்று நாட்களில் கிளந்தானில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்பாசன மற்றும் வடிகால் துறை (டிஐடி) கணித்துள்ளது.

தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, பாசிர் பூத்தே, பச்சோக், தானா மேரா, மச்சாங், கோலக்கிராய் மற்றும் ஜெலி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தும்பாட்டைப் பொறுத்தவரை, சுங்கை கோலோக் ஆற்றுப் படுகை, சுங்கை கிளந்தான் பேசின் மற்றும் சுங்கை பெங்கலான் நாங்கா பேசின் ஆகிய பகுதிகளை சுற்றியில் தாழ்வான பகுதிகள் ஆபத்தில் உள்ள பகுதிகளாகும் என்று அது மேலும் கூறியுள்ளது.

“கோத்தா பாருவில், சுங்கை கிளந்தான், சுங்கை பெங்கலான் டத்து மற்றும் சுங்கை செமேராக் ஆகிய மூன்று ஆற்றின் தாழ்வான பகுதிகள் வெள்ளம் ஏற்படும் ஆபத்தில் உள்ளன என்றும், அதேநேரம் பாசிர் பூத்தேயில் உள்ள சுங்கை கிளந்தான் மற்றும் சுங்கை செமேராக் பஆகியவற்றின் அருகிலுள்ள தாழ்நிலப்பகுதிகளும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அது இன்று (டிசம்பர் 26) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here