குளுவாங்கில் திடீர் வெள்ளம்; எட்டு குடும்பங்கள் தற்காலிக நிவாரண மையத்தில் தஞ்சம்

குளுவாங்:

ரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால், நேற்று முன்தினம் கம்போங் மலாயு புக்கிட் நியாமுக் மற்றும் கம்போங் சம்பார் ஜெயாவில் உள்ள 11 வீடுகள் பாதிக்கப்பட்டன என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.

மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் (மெட்மலேசியா) நேற்றைய (டிசம்பர் 29) அறிக்கையின்படி, நேற்று இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று பத்து பகாட், குளுவாங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களை பாதிக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதேநேரம் கெடா (கோலா மூடா, சிக், பாலிங் மற்றும் கூலிம்), பேராக் (லாரூட், மாடாங், மற்றும் செலாமா, உலு பேராக் மற்றும் முஅல்லிம்), சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் கோலாலம்பூர் ஆகிய ஆறு மாநிலங்களுக்கும் இதேபோன்ற வானிலை நிலவும் என்றும் அது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here