துபாய் கார் ரேஸ்: அஜித் அணி 3வது இடம்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

கார் ரேஸில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் நடிகர் அஜித்குமார், துபாயில் நடந்து வரும் ’24எச்’ ரேஸில் அஜித் தலைமையிலான ‛அஜித்குமார் ரேஸிங்’ அணி பங்கேற்றுள்ளது.

இதற்கிடையே நேற்று (ஜன.,11) திடீரென ரேஸில் இருந்து அஜித் விலகுவதாக அறிவிக்கபட்டது. இதுதொடர்பாக அஜித் குமாரின் ரேஸிங் அணி சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ‛‛பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்து, உடல் நலன் மற்றும் அணியின் நலனைக் கருத்தில் கொண்டு துபாய் 24H கார் ரேஸில் இருந்து அஜித் விலகுகிறார். எனினும் அணியின் உரிமையாளராக போட்டியில் தொடர்வார். கடினமான மற்றும் தன்னலமற்ற இந்த முடிவை அஜித்தே எடுத்துள்ளார். அஜித் அணி தொடர்ந்து ரேஸில் போட்டியிடும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

அஜித்குமார் இந்த நிகழ்வில் இரண்டு ரோல்களை மேற்கொள்ளவுள்ளார். போர்ஷ்சே 992 கப் கார் (எண் 901) பந்தயத்தில் அணி உரிமையாளராகவும், போர்ஷ்சே கேமேன் ஜிடி4 பந்தயத்தில் ஓட்டுநராகவும் பங்கேற்கவுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று (ஜன.,12) நடைபெற்ற போட்டியில் அஜித்குமாரின் அணி போர்ஷ்சே 992 கப் கார் (எண் 901) ரேஸில் 3வது இடம் பிடித்து அசத்தியது. ஒட்டுமொத்த தொடரில் 23வது இடம் பிடித்திருந்தது. மேலும் ஜிடி4 பிரிவில் ‛ஸ்பிரிட் ஆப் தி ரேஸ்’ (Spirit of the race) எனும் விருதும் வழங்கப்பட்டுள்ளது. வெற்றிப்பெற்றதும் இந்திய தேசியக்கொடியுடன் ரசிகர்களை சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அஜித். அத்துடன், வெற்றிப்பெற்ற அணிகளை கெளரவப்படுத்தும்போதும் அவர் இந்தியாவின்  தேசியக்கொடியுடன் மேடையேறினார்.

அஜித்குமாரின் அணி 3வது இடம் பிடித்திருந்ததை அடுத்து, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here