கோத்தா பாரு:
குடிநுழைவுத்துறை பெற்ற ரகசியத் தகவலைத் தொடர்ந்து, பல்வேறு அமலாக்க அமைப்புகள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, கிளந்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, அதிக காலம் தங்கியிருந்த குற்றச்ச்சாட்டில் 9 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த வாரம் Kok Lanas மற்றும் Ketereh பகுதிகளில் இந்த கைதுகள் இடம்பெற்றதாக கிளந்தான் குடிநுழைவுத்துறை தலைவர் முகமட் யூசப் கான் முகமட் ஹசன் தெரிவித்தார்.
இரண்டு பெண்கள் உட்பட கைது செய்யப்பட்டவர்கள் மியான்மர் மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், 22 முதல் 48 வயதுடைய 9 பேரும் தானா மேராவிலுள்ள குடிநுழைவு தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் கூறினார்.


















