கோலாலம்பூர்:
நாளை முதல் வறிய மக்களுக்கான ரஹ்மா உதவித் தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்காக அரசாங்கம் 13 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது, மேலும் eKasih பதிவுகளில் உள்ள B40 எனப்படும் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு தலா 2100 ரிங்கிட் வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
இந்நிலையில் சாரா உதவித்தொகை மாதாந்திரம் RM100 பெறுநரின் அடையாள அட்டையில் செலுத்தப்படும் என்றும், இதன்கீழ் ஏப்ரல் முதல் 5.4 மில்லியன் ரஹ்மா உதவித் தொகை பெறுநர்கள் கூடுதலாக சாரா உதவியைப் பெறுவார்கள் என்று அது மேலும் தெரிவித்துள்ளது.





















