பகாங், சபாவில் இன்று காலை திடீர் வெள்ளம்!

கோலாலம்பூர்:

காங் மற்றும் சபாவில் இன்று காலை வெள்ளம் ஏற்பட்டதால், ரவூப் மற்றும் கோத்தா மருது ஆகிய இடங்களில் நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

பகாங்கில் பெய்த தொடர் மழையினால் ரவூப்பில் வெள்ளம் ஏற்பட்டது, அங்கு இன்று அதிகாலை 2.30 மணிக்கு செக்கோலா கேபாங்சான் உலு சுங்கையில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று, ரவூப் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியது.

“அதேநேரம் தித்தி வாங்சா ரேஞ்ச் பகுதியில் நள்ளிரவு 1 மணி வரை தொடர்ந்து பெய்த மழையால், சுங்கை பத்து மாலிமில் இருந்து நீர் கரைபுரண்டு ஓடியது என்றும் இதனால் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர் என்றும், அங்குள்ளவர்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது” என்றும் அது மேலும் கூறியது.

சபாவில், கோத்தா மருது மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர், இன்று காலை SMK பெங்கொங்கானில் திறக்கப்பட்டுள்ள துயர்துடைப்பு மையத்தில் தஞ்சசமடைந்துள்ளனர் என்று, சபா பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here