கோத்த கினபாலு:
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை, மூன்று பிரம்படிகள் விதித்து கோத்தா கினாபாலு அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
55 வயது ஆசிரியரை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (1) இன் கீழ் நீதிமன்றம் குற்றவாளி எனக் கண்டஅறிந்து, இந்த தண்டனை விதித்தது.
இக்குற்றச்சாட்டிற்கு, 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் சவுக்கடி தண்டனை விதிக்கப்படும்.
மேலும், குற்றவாளி சிறைத்தண்டனை அனுபவிக்கும் போது மறுவாழ்வு ஆலோசனைக்கு உட்படுத்தப்படவும், மூன்று ஆண்டுகள் போலீஸ் மேற்பார்வையில் இருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த பிப்ரவரி 15, 2022 அன்று கோத்தா மருடுவில் உள்ள ஒரு வீட்டில் பாதிக்கப்பட்ட 16 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக, குற்றம் சாட்டப்பட்டது.




















