உலு சிலாங்கூர்:
கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.24) துர்நாற்ற மாசுபாடு தொடர்பான தொடர்ச்சியான பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறியதால், பத்தாங் காலியில் உள்ள பிராய்லர் கோழிப் பண்ணை ஒன்றை உடனடியாக மூட உலு சிலாங்கூர் நகராட்சி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து புகார்களைப் பெற்றதாகவும், அங்கிருந்த கோழி எருவின் பெரிய குவியல்கள் காரணமாக இந்த துர்நாற்றம் ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது,” என்று, உலு சிலாங்கூர் நகராட்சி மன்றம் (MPHS) நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த கோழிப் பண்ணைக்கு கடந்த ஜனவரி 10 அன்று பண்ணை உரிமையாளருக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டது, அதில் பண்ணைக் கழிவுகளை முறையாக நிர்வகிப்பதன் மூலம் இந்த துர்நாற்ற மாசுபாடு பிரச்சினையைத் தீர்க்க அறிவுறுத்தியது. இருப்பினும் அவர் அதற்கு இணங்க தவறியதால் மூடல் உத்தரவு வெளியிடப்பட்டது என்று MPHS மேலும் கூறியுள்ளது.
மேலும், MPHS உத்தரவைப் பின்பற்றத் தவறியதற்காக அபராதம் விதித்தது.
இந்த விவகாரம் இப்போது கோழி வளர்ப்பு உரிமங்களை வழங்கும் தொடர்புடைய துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே “அனைத்து பண்ணை உரிமையாளர்களும் நிலையான பண்ணை மேலாண்மை வழிகாட்டுதல்களை, குறிப்பாக கழிவு மேலாண்மையை சரியாகவும் தொடர்ச்ச்சியாகவும், கடைப்பிடிக்க நினைவூட்டப்படுகிறார்கள்,” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.




















