போரினால் சிதைந்து போன பாலஸ்தீனம் காஸாவை மீண்டும் கட்டி எழுப்பும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டத்தை Global Peace Mission (GBM) Malaysia எனும் மலேசிய குளோபல் அமைதி அமைப்பு வரவேற்றுள்ளது.

இந்த மனிதநேய முயற்சியை பிரதமர் தலைமையிலான மடானி அரசாங்கம் விரைவுப்படுத்த வேண்டும் என்று அந்த அரசு சாரா இயக்கம் வலியுறுத்தியது.
உலகளாவிய அளவில் அமைதி, மக்கள் நல்வாழ்வில் அதீத அக்கறை காட்டி வருகிறார் அன்வார். உருகுலைந்து போயிருக்கும் காஸாவை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு மலேசிய அரசாங்கம் தயார் என்று பிரதமர் அறிவித்த போது உலக நாடுகளும் வரவேற்றன.

காஸா மறுநிர்மாணிப்பு செய்யப்படும் என்று அறிவித்த முதல் நாடு என்ற பெருமையும் மலேசியாவையே சாரும். இந்த போற்றுதலுக்கு பிரதமரே பிரதான காரணம் என்று GPM தெரிவித்தது.

பிரதமரின் இந்த உன்னத நோக்கத்திற்கு முழு ஆதரவு தருவோம் என்று உறுதி அளித்த அவ்வியக்கம், கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி காஸாவை புனரமைப்பு செய்வோம் என்ற இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது.





















