61 ஆலயங்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு மானியம்

கோலாலம்பூர்:

வ்வாண்டு தைப்பூசத்தை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசு மொத்தம் 61 ஆலயங்களுக்கு மானியம் வழங்கியுள்ளது என்றும் மொத்தம் RM561,000 ரிங்கிட் அவ்வாலயங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது என்றும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு தெரிவித்துள்ளார்.

இந்த தைப்பூச விழாவை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் சிறப்பு நிகழ்வு நேற்று மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வழங்கப்பட்ட மணியம் சம்பந்தப்பட்ட ஆலயங்களின் மேம்பாடு உட்பட இதர நடவடிக்கைக்காக வழங்கப்பட்டது என்றும், ஒவ்வொரு ஆண்டும் சிலாங்கூர் மாநில அரசு ஆலயங்களுக்கு இந்த நிதியை வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here