SPM 2024: 8,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வுகளுக்கு வரவில்லை – ஃபட்லினா

கோலாலம்பூர்:

பிப்ரவரி 6 ஆம் தேதி வரை கல்வி அமைச்சினால் பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி, மொத்தம் 8,076 சிஜில் பெலஜாரான் மலேசியா (SPM) பரீட்சை விண்ணப்பதாரர்கள் எந்தப்பாடத்திற்கும் தோற்றவில்லை.

இந்த எண்ணிக்கையில் 6,231 பேர் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் இருந்து விண்ணப்பித்தவர்கள் என்று, கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.

SPM தேர்வில் மாணவர்கள் பங்குபற்றாத விவகாரத்தை அமைச்சகம் தீவிரமாக கருதுகிறது என்று அவர் சொன்னார்.

“தேர்வின் போது மாணவர்கள் பங்குபற்றாததற்கான பகுப்பாய்வின் அடிப்படையில், 2024 SPM தேர்வில் விண்ணப்பதாரர்கள் வராததற்கு முக்கிய காரணங்களாக வேலை, குடும்பப் பிரச்சனைகள், உடல்நலப் பிரச்சனைகள், இறப்பு மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்வது ஆகியவை அடங்கும்” என்று, டாக்டர் அமாட் யூனுஸ் ஹைரியின் (PN-Kuala Langat) கேள்விக்கு அவரளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here