UNHCR அகதிகளை சட்டப்பூர்வமாக வேலை செய்ய அனுமதிப்பது தொடர்பில் அரசு ஆராய்கிறது – ஜாலிஹா

கோலாலம்பூர்:

க்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தில் (UNHCR) பதிவு செய்யப்பட்ட அகதிகள் மலேசியாவில் சட்டப்பூர்வமாக பணிபுரிய அனுமதிப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பில் அரசாங்கம் பரிசீலனை செய்து வருகிறது.

ஐ.நாவின் 1951 அகதிகள் மாநாட்டில் மலேசியா கையொப்பமிடவில்லை, இருப்பினும் அகதிகள், குறிப்பாக மியன்மார் மற்றும் பிற நாடுகளில் இருந்து வரும் அகதிகள் மீது நாடு எப்போதும் மனிதாபிமான அணுகுமுறையையே கடைப்பிடிக்கிறது என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கூறினார்.

அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை நிர்வகிப்பதற்கான புதிய உத்தரவின் கீழ், பதிவுசெய்யப்பட்ட அகதிகளுக்கு சமூக உதவி வழங்குவதையும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அவர் சொன்னார்.

தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் தெரேசா கோக்கிற்கு (PH-Seputeh) அவரளித்த எழுத்துப்பூர்வ பாராளுமன்ற பதிலில் டாக்டர் ஜாலிஹா இவ்வாறு கூறினார்.

“இருப்பினும், சம்பந்தப்பட்ட துறைகளின் நிபந்தனைகள் மற்றும் தொழிலாளர் தேவைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்களின் விவரங்களை அரசு மிகவும் கவனமாக ஆராய்வதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here