கொடுத்து ஏமாந்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க

பணத்தையும் நகையையும் வாங்கியவர்கள் திருப்பித் தராமல் ஏமாற்றினாலோ அல்லது திருப்பித் தருவதற்குரிய சூழ்நிலை அவர்களுக்கு இல்லாமல் இருந்தாலோ அதனால் பாதிக்கப்படக் கூடியவர்கள் நம்பியவர்கள் மட்டுமே.

அப்படிப்பட்டவர்கள் முருகப்பெருமானை நினைத்து வேலுடன் வெற்றிலையை எந்த முறையில் வைத்தால் கொடுத்த பணமும் நகையும் திரும்ப கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகப் பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

இந்த காலத்தில் பணத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கிறது. பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதிப்பது பெரிய விஷயம் இல்லை. அதை சேர்த்து வைத்து  உபயோகமாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அதற்கு முழுமையான பலன் கிடைக்கும்.
இந்த அடிப்படையில் பலரும் தாங்கள் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் நகை போன்றவற்றை வட்டிக்கு விடலாம் அதன் மூலம் நமக்கு வருமானம் உண்டாகும் அதன் மூலம் நாம் ஏதாவது ஒரு நல்ல காரியத்தை செய்யலாம் என்று நினைத்து அவர்களுக்கு தெரிந்தவரிடமே கொடுப்பார்கள்.

ஆனால் பலருக்கும் அவர்கள் கொடுத்த பணம் திரும்ப கிடைக்காத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விடும். அப்படிப்பட்டவர்கள் அந்த பணத்தை மட்டுமாவது திரும்ப பெற்றுக்

கொண்டால் போதும் என்று நினைப்பார்கள். எவ்வளவு முயற்சி செய்தும் பணம் திரும்ப கிடைக்கவில்லை என்னும் பட்சத்தில் இறைவனிடம் சரணாகதி அடையலாம். அந்த வகையில் முருகப் பெருமானை எந்த முறையில் வழிபட்டால் நாம் கொடுத்த பணமும் நகையும் திரும்ப கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம்.

இந்த வழிபாட்டை சுப முகூர்த்த நாளாக பார்த்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டும். இதற்கு நமக்கு ஒரு சிறிய அளவிலான வேல் வேண்டும். ஒரு

காற்று புகாத மூடி போட்ட டப்பாவை எடுத்துக் கொள்ளுங்கள். அது எவர் சில்வர் பாத்திரமாக இருந்தாலும் சரி பிளாஸ்டிக் பாத்திரமாக இருந்தாலும் சரி கண்ணாடி பாத்திரமாக இருந்தாலும் சரி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக மஞ்சள், குங்குமம், பச்சரிசி, கிழியாத ஒரு நல்ல வெற்றிலை, சிறிது பச்சை கற்பூரம் வேண்டும்.
இதை அப்படியே எடுத்து அந்த டப்பாவிற்குள் வைத்து அதற்கு மேல் பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும். பிறகு நாம் வாங்கி வைத்திருந்த வேலையும் அந்த வெற்றிலையின் மேல் வைத்து விட்டு மூடி விட வேண்டும். இப்பொழுது இதை முருகப்பெருமானின் பாதத்தில் அப்படியே வைத்து விடுங்கள்.
இந்த பரிகாரத்தை செய்து முடித்த மூன்றாவது நாள் இந்த டப்பாவை திறந்து இதில் இருக்கக்கூடிய பச்சரிசியை பறவைகளுக்கு தானமாக போட்டுவிட்டு மீதம் இருக்கக்கூடிய வெற்றிலை மஞ்சள் குங்குமம் பச்சைக் கற்பூரம் இவற்றை ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும். வேலை எடுத்து முருகனின் பாதத்தில் வைத்து விடுங்கள். உங்களிடம் எப்பொழுது அந்த பணம் திரும்ப வருகிறதோ அப்பொழுது அந்த வேலை முருகப்பெருமானின் உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here