பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன? அறிவியலும் ஆன்மீகமும்.

கோலாலம்பூர், (ஜூன் 25):

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை முறை ஆரோக்கியமான வாழ்க்கை முறையா? என்று கேட்டால், எத்தனை பேர் ஆம் என்று பதில் கூறுவீர்கள். ஏனென்றால் இப்போதெல்லாம் காலம் தாமதித்து தூங்குவதும் , எழுவதும் சாதாரண வாழ்க்கை முறையாகிவிட்டது.

வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் எல்லோருமே அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எங்களுடைய எண்ண அலைகளுக்கு சக்தி இருக்கிறது. நாம் தொடர்ந்து ஒரு விசயத்தை நினைத்துக் கொண்டே இருப்போமானால், அது நமக்கு கிடைக்கும். அதனால் தான் “எண்ணம் போல்  வாழ்க்கை “ என்கின்றனர் சான்றோர்கள்.

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் யார் ஒருவர் சூரிய உதயத்திற்கு முன்னர் எழுந்து, அவர் வாழ்க்கைக்கு தேவையான ஆக்கபூர்வமான வேலைகளை  செய்கிறார்களோ அவர்கள் தான் வாழ்வில் முன்னேறிக்கொண்டே இருக்கின்றார்கள். இவர்கள் தங்களை அறிந்து தரணியை வென்றுள்ளார்கள்.  நீங்களும் இந்த பிரம்ம முகூர்த்தத்தை பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் வெற்றியடையுங்கள்.

பிரம்ம முகூர்த்தம் என்றால், மிகப்பெரிய சுபவேளை என்று பொருள். நாம்  தூங்க தொடங்கும் போது அந்த நாளில் நடந்த அனைத்து விசயங்களும் எமது எண்ணங்களை சுற்றி வந்துகொண்டே இருக்கும் . அவ்வாறுள்ள நமது எண்ணங்களும் அமைதியடைய 3 1/2 மணி நேரம் எடுக்கின்றது. கிட்டத்தட்ட 2 மணிக்கு மேல் அனைத்து மனிதர்களும் ஆழ்ந்த உறக்கத்திற்க்கு சென்று விடுவார்கள்.

எனவே இந்த நேரத்தில் மனித எண்ண அலைகளின் தாக்கங்கள் குறைந்துவிடும். எனவே இந்த நேரத்தில் எதிர்மறையான சக்தி / அதிர்வுகள் (negative vibrations) இருக்காது. ஈர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதுடன் மின்காந்த அலைகளும் அதிகமாக இருக்கும்.

இவ்வாறு அதிகாலையில் எழும்போது, பிரபஞ்சத்திலிருந்து வரும் நேர்மறை அலைகள் (positive vibrations) எங்களுடைய எண்ணங்களிக்கு வலிமையை ஏற்படுத்துகின்றன. இந்த நேரத்தில் 70% மக்கள் தூக்கத்திலேயே இருக்கின்றனர். எனவே இந்த நேரத்தில் மனிதர்களின் எண்ண அலைகள் மிகக்குறைவாகவே பிரபஞ்சத்தில் பயணிக்கும்.

பிரம்ம முகூர்த்த நேரம் அதிகாலை 3.30 இருந்து சூரியன் உதிப்பதற்கு 1 மணி 36 நிமிடங்கள் முன்னர் வரையான காலப்பகுதி வரை இப்பிரம்ம முகூர்த்த நேரம் இருக்கும். இந்த நேரத்தில் விளக்கு ஏற்றி, சாமியை வழிபடுவது சிறப்பு என்கின்றனர் சான்றோர்கள். வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவு எடுப்பதற்கும் இந்த நேரம் மிக சிறந்தது என்றும் கூறப்படுகின்றது.

ஒரு மனிதன் 48 நாட்களுக்கு (ஒரு மண்டலம்) தொடர்ந்து ஒரு செயலை செய்தால் அது வழக்கமாக மாறிவிடும் என்கின்றனர் அறிவியலாளர்கள். எனவே இரவு சீக்கிரமாகவே தூங்கினீர்களானால் அதிகாலையில் எழுந்திருப்பது சுலபமாக இருக்கும். உங்களை வெற்றி கொண்டால் உலகையே வெற்றி கொள்ளலாம்.

இப்பிரம்ம முகூர்த்த நேரத்தில் என்ன நடைபெறுகின்றது? நமது வாழ்க்கை இப்பிரபஞ்சத்தின் ஒரு விளைவே. இந்த அண்டம் என்று நாம் அழைக்கின்ற ஒரு பிரமாண்ட நிகழ்வுடைய ஒரு பகுதிதான் நாங்கள் அனைவருமே. மனிதர்கள் ஒரு தனிப்பட்ட அம்சம் இல்லை. அதனால் நாங்கள் இப்பிரபஞ்சத்துடன் ஒத்துப்போனோம் ஆனால் பல விசயங்கள் எனக்கு சாத்தியமாகும்.

அமெரிக்காவின் டெலிசி மாகாணத்திலுள்ள ஈசா மையத்தில் ஒருவகை சிக்காடா பூச்சிகள் இருக்கின்றன. அப்பூச்சிகள்ன் 17 வருடத்திற்கு ஒருமுறைதான் தூக்கத்திலிருந்து எழுகிறன. எழுந்ததும் இனப்பெருக்கம் செய்துவிட்டு மறுபடியும் தூங்கிவிடுகின்றன. இவைகளை 17 வருடத்திற்கு ஒருமுறை அலாராம் வைத்த மாதிரி எவ்வாறு எழும்புகின்றன? இவை இயற்கையோடு ஒத்துபோய் இருப்பதானாலேயே இது சாத்தியம். ஆகவே நாமும் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் எங்களாலும் எதுவும் சாத்தியமாகும்.

நீங்கள் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து இவ் அண்டத்தோடு சேர்ந்து , பிரார்த்தனை செய்யுங்கள். மாற்றத்தை தரும் பிரம்ம முகூர்த்தம். பிரம்மம் என்றால் படைத்தல் அல்லது உருவாக்குதல் என்று பொருள். முகூர்த்தம் என்றால் நேரம் என்பது பொருள். நமது எண்ணங்களுக்கு உருவாக்கும் சக்தி உண்டு.  எனவே பிரம்ம முகூர்த்தம் என்பது எண்ணங்களின் சக்தியால் நமது வாழ்வை நாமே உருவாக்கும் நேரம் என்று பொருள்படுகின்றது.

நேர்மறையான எண்ணங்களை,  வார்த்தைகளை, செயல்களை இந்த நேரத்தில் செய்வோமானலால் இப்பிரபஞ்சத்தின் நேர்மறையான சக்தியுடன் சேர்ந்து அவற்றை நமக்கு எங்கிருந்தாலும் கொண்டுவந்து சேர்க்கும். ஆகையால் தான் நமது முன்னோர்கள்  பாடங்கள் படிப்பது, சங்கீதம் பயிற்சி செய்தல், போன்றவற்றை அதிகாலையில் எழுந்து செய்ய சொல்வார்கள்.

எல்லா உயிரினங்களும் இந்த பிரம்ம முகூர்த்தத்திலேயே கண் விழிக்கின்றன.  அதிகாலையில் எழும்புவதால் உடலிலும் உள்ளத்திலும் பல மாற்றங்கள் நடைபெறும்.  உடலில் நிறைய சுரப்பிகள் உள்ள. இதில் எமது கண்பார்வைக்கு தேவையான மெலதொனின் எனப்படும் தூக்க ஹார்மோன் சுரக்கின்றது. இது நாம் ஆழ்ந்து தூங்கும் போதே அதாவது நம் கண்ணுக்கு எந்தவித வெளிச்சமும் கண்ணுக்கு படாத நிலையிலேயே சுரக்க ஆரம்பிக்கின்றது. இது நம்முடைய உடலில் உருவாக கூடிய புற்று நோயின் அணுக்களை கொல்லக்கூடிய தன்மை கொண்டது.

இது இரவில் மட்டுமே நடக்கும். இந்த சுரப்பி சூரிய ஒளி பரவத்தொடங்கியதும் அதனுடைய செயற்பாட்டை குறைத்துக் கொண்டே போகும். அதனால் தான் சீக்கிரமாக தூங்கி சீக்கிரமாக எழும்ப வேண்டும் என்கின்றனர்.

எனவே அதிகாலையில் வளிமண்டலத்தில் ஓசோனின் அளவு அதிகமாக நிறைந்திருக்கும். காலையில் சூரியன் உதயமாகும் போது, சூரியக்கதிரிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களை இது உறிஞ்சிக்கொண்டு, பூமிக்கும் பூமியில் வாழும் உயிரினங்களுக்கும் ஒரு பாதுகாப்பு அரணாக விளங்குகின்றது.

ஆகவே இந்த ஓசோன் நிறைந்திருக்கும் நேரத்தில் நாம் எழுந்து, சுத்தமான காற்றை சுவாசித்தோமே ஆனால், உடலில் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கும் மேலும் ஓசோனின் நேர்மறை சக்தியுடன் எங்களது எண்ணங்களின் நேர்மறை சக்தியும் சேர்ந்து, அந்த நாள் முழுவதுமே நல்லதாகவே அமையும். எனவேதான் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் வழிபாடோ அல்லது தியனமோ செய்வது மிகச்சிறப்பு என்கின்றனர் அனுபவ ரீதியாக வாழ்க்கையில் வெற்றிபெற்ற அறிஞர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here