சிறப்பு மிகுந்த சஷ்டி கிருத்திகை வழிபாடு

கலியுகத்தின் தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். முருகப்பெருமானை வழிபடாத நபர்களே இருக்க முடியாது என்றுதான் கூற வேண்டும். முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருள் என்பது கண்டிப்பாக கிடைக்கும். அப்படி முருகப்பெருமானின் அருள் கிடைப்பதற்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளில் மிகவும் முக்கியமான முறையாக திகழ்வதுதான் சஷ்டி மற்றும் கிருத்திகை வழிபாடு. இந்த மாசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி என்பது கிருத்திகை நட்சத்திரத்துடன் சேர்ந்து வருகிறது என்பதால் இதற்கு கூடுதல் பலன் கிடைக்கும்.
சஷ்டி கிருத்திகை வழிபாடு முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்கள் முருகப்பெருமானுக்குரிய திதியான சஷ்டி திதியில் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். அதே போல் கிருத்திகை நட்சத்திரம் வரக்கூடிய நாட்களிலும் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இந்த முறை மாசி மாதத்தில் வளர்பிறை சஷ்டியும் கிருத்திகை நட்சத்திரமும் ஒரு சேர வந்திருக்கிறது. அதனால் இந்த நாளை தவறவிடாமல் வழிபாடு செய்பவர்களுக்கு சஷ்டி திதியில் விரதம் இருந்த பலனும் கிடைக்கும் கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்த பலனும் கிடைக்கும். இந்த விரத முறைகளோடு கூடுதலாக இந்த ஒரு தீபத்தை ஏற்றி வைத்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
சஷ்டி திதி என்பது மார்ச் மாதம் நான்காம் தேதி இரவு 8:16 மணிக்கு ஆரம்பித்து மார்ச் மாதம் ஐந்தாம் தேதி மாலை 5:47 வரை இருக்கிறது. கிருத்திகை நட்சத்திரம் மார்ச் மாதம் ஐந்தாம் தேதி காலை 7:20 க்கு தொடங்கி அன்றைய நாள் முழுவதும் இருக்கிறது என்பதால் சஷ்டி திதியும் கிருத்திகை நட்சத்திரமும் ஒரு சேர இருக்கக்கூடிய நேரத்தில் ராகு காலம் மற்றும் எமகண்ட நேரத்தை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நாம் இந்த வழிபாட்டை செய்யலாம். எப்பொழுதும் சஷ்டி மற்றும் கிருத்திகை நட்சத்திர நாட்களில் எந்த முறையில் வழிபாடு செய்வீர்களோ அதே முறையில் வழிபாடு செய்து கொள்ளுங்கள்.
அதோடு முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு தாம்பாள தட்டை வைத்து அதில் முருகப்பெருமானுக்குரிய தானியமான துவரம் பருப்பை பரப்பிக் கொள்ளுங்கள். அந்த துவரம் பருப்பில் அறுகோணம் என்று கூறக்கூடிய நட்சத்திரத்தை கைகளால் வரைந்து கொள்ளுங்கள். அந்த நட்சத்திரத்திற்கு நடுவே ஒரு சிறிய வாழை இலையை வைத்து அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டுக் கொள்ளுங்கள்.
இந்த அகல் விளக்கை சுற்றி ஆறு முக்கோணங்கள் இருக்கும். அந்த முக்கோணங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். இப்பொழுது தீபத்தை ஏற்றி முருகப்பெருமானுக்குரிய மந்திரங்களையோ கவசங்களையும் முழு மனதோடு கூறி அந்த தீபத்தை பார்த்தவாறு உங்களுடைய வேண்டுதல் என்னவோ அதை கூற வேண்டும். இந்த சமயத்தில் முருகப்பெருமானுக்கு ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். முழு மனதோடு வேண்டுதலை வைத்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
தீபம் குறைந்தது அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை எரிய வேண்டும். பிறகு தீபத்தை குளிர வைத்து விட வேண்டும். அன்று முழுவதும்
இது அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். மறுநாள் காலையில் இந்த துவரம் பருப்பை பசு மாட்டிற்கு அல்லது பறவைகளுக்கு தானமாக தந்து விட வேண்டும். ஒரு ரூபாய் நாணயங்களை ஏதாவது ஒரு துணியிலோ பேப்பரிலோ கவிரிலோ மடித்து பத்திரமாக செலவு செய்யாமல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் முற்றிலும் நீங்குவதோடு செல்வ செழிப்பும் உண்டாகும். மேலும் நாம் என்ன வேண்டுதலை முன்வைத்து இந்த தீபத்தை ஏற்றினோமோ அந்த வேண்டுதலும் நிறைவேறும்.
மிகவும் அரிதாக வரக்கூடிய இந்த சஷ்டி திதி மற்றும் கிருத்திகை நட்சத்திர நாளை தவிர விடாமல் முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here