முன் அறியாமல் செய்த கர்ம வினை பாவங்கள், நம்மை இப்போது ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. செய்த கர்ம வினை நீங்க, பாவங்கள் கழிந்து, செழிப்பான நல்லவாழ்க்கை அமைவதற்கு சிவ வழிபாடு அற்புதமான பலன்களை கொடுக்கும். சிவ வழிபாடு செய்பவர்களுக்கு கர்ம வினை பாவங்கள் விரைவில் கரைந்து போகும் என்பது நம்பிக்கை.
வினை நீங்க சிவபெருமானை தவறாமல் வழிபட வேண்டும். சிவபெருமானை வழிபடுபவர்கள் ஸ்படிக லிங்கத்தை தேர்ந்தெடுக்கலாம்.
ஸ்படிக வடிவில் இருக்கக்கூடிய லிங்கம் ஒன்றை பூஜை அறையில் வையுங்கள். ஸ்படிகம் நல்ல அதிர்வலைகளை வெளியிடக் கூடியது. மந்திரங்களை உள்வாங்க கூடியது. இந்த லிங்கத்தை பூஜை அறையில் வைத்து ஒவ்வொரு சிவராத்திரி அன்றும் வழிபட்டு வர வேண்டும்.
திருமூலர் “யாவருக்குமாம் இறைவற்கொரு பச்சிலை” என்று கூறுவது போல, சிவனுக்கு வில்வ இலைகள் இருந்தாலே அவர் முழு திருப்தி அடைந்து விடுகிறார். பெரிதாக நாம் ஒன்றும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, எல்லோராலும் எளிதாக செய்யக்கூடிய சாதாரண விஷயங்களை இறைவனுக்கு செய்தாலே, முழு பக்தி இருந்தாலே போதும் நம் வினைகள் நீங்கும். சிவராத்திரிகளில் ஸ்படிக லிங்கத்தை பூஜை அறையில் வைத்து வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
சிவ பக்தர்களின் அடையாளமாக திகழக்கூடியது ஐந்து பொருட்கள். ருத்ராட்சம், விபூதி, வில்வம், ஸ்படிக லிங்கம், நமச்சிவாய என்னும் ஐந்து எழுத்து வாய்ந்த சக்தி உள்ள பஞ்சாட்சர மந்திரம் ஆகியவை ஆகும். இதில் ருத்ராட்சத்தை எப்போதும் அணிந்திருப்பவர்கள் சிவனுடைய அருள் பரிபூரணமாக பெற்றவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு சிவராத்திரியின் பொழுதும் ஸ்படிக லிங்கத்திற்கு வழிபாடு செய்யும் முன்னர் சுத்தபத்தமாக குளித்து முடித்து உடலில் விபூதியை பூசிக் கொள்ள வேண்டும். இது நம் சரீரத்தை சுத்தி படுத்தி மனதை ஒருமுகப்படுத்தும்.





















