ஆயிர் கூனிங் சட்டமன்றத் இடைத்தேர்தல்: 500 போலீஸ்காரர்கள் வாக்களிக்க தகுதி

தாப்பா:

யிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று நடைபெறும் முன் கூட்டிய வாக்குப்பதிவில் இதுவரை 70 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்று வரும் முன் கூட்டிய வாக்களிப்பில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள 500 போலீஸ்காரர்களில் 90 விழுக்காட்டினர் வாக்களிப்பார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது என்று, தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹருன் அறிவுறுத்தியுள்ளார்.

இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய முன் கூட்டிய வாக்களிப்பு தற்போது சுமூகமாக நடைபெற்று வருகின்றது.

இவ்வாண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி மாரடைப்பால் ஆயிர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் காலமானதைத் தொடர்ந்து, அத்தொகுதியில் இடைத்தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here