கோலாலம்பூர்:
நோய் வாய்ப்பட்டுள்ள அண்ணியை பார்ப்பதற்காக ஆஸ்திரேலியா செல்ல முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசினுக்கு தற்காலிகமாக அவரது கடப்பிதழை நீதிமன்றம் வழங்கியது.
ஆஸ்திரேலியாவில் உள்ள அண்ணியை பார்க்கச் செல்வதற்காக, தனது அனைத்துலக கடப்பிதழை தற்காலிகமாகப் பெறுவதற்கான முஹிடினின் விண்ணப்பத்தை இன்று செஷன்ஸ் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
அதனைத் தொடர்ந்து, “பாஸ்போர்ட் இன்று விண்ணப்பதாரரிடம் ஒப்படைக்கப்படும், மேலும் மே 20 அன்று நீதிமன்றத்தில் திருப்பி அனுப்பப்பட வேண்டும்” என்று, நீதிபதி அசுரா அல்வி கூறினார்.




















