அக்டோபர் 2024 முதல் புகைபிடித்தல் சட்டத்தின் கீழ் 43,000 க்கும் மேற்பட்ட notice களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது

காஜாங்:

பொது சுகாதாரத்திற்கான புகைபிடிக்கும் பொருட்களை கட்டுப்படுத்தும் சட்டம் 2024 (சட்டம் 852) இன் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக சுகாதார அமைச்சகம் 43,455 அபராத அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்த சட்டம் அக்டோபர் 1, 2024 அமலுக்கு வந்தது முதல் ஏப்ரல் 20, 2025 வரை குறித்த என்னிக்கை பதிவாகியுள்ளது.

இந்தக் காலகட்டத்தில், புகைபிடிக்கும் பொருட்களை விளம்பரப்படுத்துவதைத் தடை செய்வது தொடர்பான குற்றங்களுக்காக பிரிவு 7(1) இன் கீழ் மூன்று விசாரணை ஆவணங்களும், புகைபிடிக்கும் பொருட்களை ஊக்குவித்தல் மற்றும் நிதியுதவி செய்வது தொடர்பான பிரிவு 9(1) இன் கீழ் ஐந்து ஆவணங்களும் திறக்கப்பட்டன என்று, பொது சுகாதார மேம்பாட்டுப் பிரிவு இயக்குநர் டாக்டர் சுல்ஹிஸாம் அப்துல்லாவின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here