புற்றுநோயில் இருந்து மீண்ட மம்தா மோகன்தாஸ் பகிர்ந்த அனுபவம்

தமிழில் ‘சிவப்பதிகாரம்’, ‘குசேலன்’, ‘குரு என் ஆளு’, ‘தடையற தாக்க’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். மம்தா மோகன்தாசுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். சிகிச்சைக்கு பின் குணம் அடைந்து தற்போது மீண்டும் பிசியாக நடிக்க தொடங்கி உள்ளார்.

புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட அனுபவங்கள் குறித்து மம்தா மோகன்தாஸ் அளித்துள்ள பேட்டியில், “புற்றுநோய் பற்றிய புரிதல் இருந்தாலே அதை எதிர்கொள்ள முடியும். அந்த நோயில் சிக்கியவர்களுக்கு அனுதாபம் நிறைய கிடைக்கும். அனுதாபத்தை எதிர்பார்க்கும்போது அது கஷ்டத்தையே கொடுக்கும். எனக்கு அனுதாபம் எதுவும் வேண்டாம் என்றுதான் சொந்த ஊரைவிட்டு வெளியேறினேன். சினிமாவை விட்டும் விலகினேன்.

ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை எடுத்தேன். பெற்றோரின் அன்பை மட்டுமே எதிர்பார்த்தேன். குணம் அடைவது வரை கேரளாவுக்கு செல்லவில்லை. இந்த நோய் பாதிப்பில் சிக்கி குணம் அடைந்தாலும், முந்தைய தோற்றத்தில் இருக்க முடியாது. அதையும் உணரவேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here