நீலாயில் வெளிநாட்டவர்களுக்கு குறைந்த வாடகையில் வீடு – அமினுதீன்

நீலாய் – தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டுள்ள பல வளாகங்களின் வீட்டு வாடகை மிக்க குறைவாக இருப்பது வெளிநாட்டினரின் வருகைஅதிகரிப்பதற்கு ஒரு காரணமாக அமைத்துள்ளது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன் கூறினார்.

பாதுகாப்பு நடவடிக்கைக் குழுத் தலைவரான அமினுதீன் கூறுகையில், அண்டை மாநிலங்களுக்கு வேலைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு வெளிநாட்டினரின் போக்கு வரத்து மையமாக நீலாய் மாவட்டம் பயன்படுத்தப்பட்டது என்பது மற்றொரு காரணியாகும்.

அன்னியத்தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது, ஏனெனில் அவர்களில் பலர் சட்டங்களை மீறுகின்றனர்.எனவே, அதிகாரிகள் இந்த நிலைமையை கண்காணிக்கவும் வெளிநாட்டு தொழிலாளர்கள் இந்த நாட்டு விதிகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்தவும் ஆய்வுகளை மேற்கொள் வது முக்கியம் என்று அவர் கூறினார்.

நேற்று இரவு இங்கு போலீஸ், குடிவரவுத் துறை மற்றும் சுங்கத் துறை உட்பட பல்வேறு நெகிரி செம்பிலானை தளமாகக் கொண்ட அமலாக்க 350 பணியாளர்கள் கொண்ட Op Sabong எனப் பெயரிடப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

அக்டோபர் 24 அன்று தொடங்கிய ஐந்து நாள் நடவடிக்கையில், 1,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சோதனை செய்யப்பட்டு குடியேற்றச் சட்டத்தின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக 185 கைதும் செய்யப்பட்டனர் மற்றும் 254 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 398 கூட்டு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டதாக அமினுதீன் கூறினார்.

வெளிநாட்டு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் முகவர் நிலையங்கள் எப்போதும் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு பணியாளர்களுக்கான போக்குவரத்து புள்ளியாக நிலையை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் நினைவூட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here