கோலாலம்பூர்:
“பெர்சாத்து அம்னோவுடன் ஒத்துழைக்க விரும்பினால், அல்லது மீண்டும் கட்சியில் சேர விரும்பினால், முறையான விவாதங்களை நடத்த வேண்டும் என்று, அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ அஹ்மட் மஸ்லான் தெரிவித்தார்.
தங்கள் விருப்பங்களைத் தெரிவித்து அதிகாரப்பூர்வ கோரிக்கையை கடிதம் எழுதுவது உட்பட அதிகாரப்பூர்வ விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். இது குறித்து அம்னோ உச்சமன்றத்தில் அனுமதி வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பெர்சாத்து துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் என்ன முன்மொழிந்தார் என்பது குறித்து அம்னோ உச்சமன்ற அளவில் எந்த விவாதமும் இல்லை. முந்தைய உச்சமன்ற கூட்டங்களில் கூட இந்தப் பிரச்சினை பற்றி விவாதிக்கப்படவில்லை. நிச்சயமாக, இது போன்ற முக்கியமான விஷயங்கள் அம்னோ உச்சமன்ற மட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.




















