காலஞ்சென்ற படாவிக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிப்பு

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் துன் அப்துல்லாஹ் அஹ்மட் படாவி காலமானதைத் தொடர்ந்து, இன்று நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் முன்னாள் பிரதமரான துன் அப்துல்லாஹ் அஹ்மட் படாவி ஐந்தாவது பிரதமராக பணியாற்றினார். இவர் கடந்த 2003 முதல் 2008 வரை பிரதமராக இருந்தார். அப்போது மலேசியாவின் தலைசிறந்த தலைவராக துன் அப்துல்லாஹ் அஹ்மத் படாவி விளங்கினார் என்றும் அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்று மக்களவை சபாநாயகர் டான்ஶ்ரீ ஜொஹாரி அப்துல்லா கூறினார்.

அவருக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அல்- ஃபாத்திஹா வழிபாட்டினை மேற்கொண்டனர்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி துன் அப்துல்லாஹ் அஹ்மட் படாவி தனது 85ஆவது அகவையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here