மாச்சாங்கில் கார்-லோரி மோதிய விபத்தில் ஒருவர் பலி

மாச்சாங்:

ஜாலான் கோத்தா பாரு–கோலக் கிராய் சாலையின் KM50.5 இல், 46 வயது நபர் ஓட்டிச் சென்ற கார் லோரி மீது மோதியதில் அவர் உயிரிழந்தார்.

நேற்றுக் காலை 11.55 மணியளவில் விபத்து ஏற்பட்டபோது, ​​பாதிக்கப்பட்டவர் கோத்தா பாருவிலிருந்து கோலக்கிராய் நோக்கி புரோட்டான் வீராவை ஓட்டிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக மாச்சாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஹ்மட் ஷஃபிகி ஹுசின் தெரிவித்தார்.

“சம்பவ இடத்திற்கு வந்ததும், பாதிக்கப்பட்டவர் காரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் பாதையில் சென்று, கோலக்கிராய் நகரிலிருந்து கோத்தா பாரு நோக்கிச் சென்ற ஸ்கேனியா லோரி மீது மோதியது என்றார்.

இச்சம்பவத்தில் “காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மாச்சாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

மேலும் இந்த வழக்கு 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41 (1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here