ஈப்போ: கம்போங் டெபிங் டிங்கியில் ஞாயிற்றுக்கிழமை (மே 18) தீ விபத்துக்குள்ளானதில் 61 வயது முதியவர் இறந்து கிடந்தார்.
பேராக் தீயணைப்பு மீட்புத் துறை உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) சபரோட்ஸி நோர் அஹ்மத் கூறுகையில், அதிகாலை 3 மணியளவில் தீயை அணைக்கும் நடவடிக்கைக்குப் பிறகு வீட்டின் சமையலறைப் பகுதியில் பலியானவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதிகாலை 5.45 மணியளவில் பணி நிறைவடைந்தது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.









