அதிசக்தி வாய்ந்த முருகன் மந்திரம்

 

முருகனையும் முருகருக்கு வாகனமாக இருக்கும் மயிலையும் எவன் ஒருவன் தினம்தோறும் வழிபாடு செய்கின்றானோ, அவனுடைய வாழ்க்கையில் துன்பமில்லை. இது நிதர்சனமான உண்மை. மயிலை கண்டால் பாம்பு பயப்படும் என்று சொல்லுவார்கள். இந்த இரண்டு உயிரினங்களையும் ஒன்றாக சேர்த்து தன்னோடு வைத்திருக்கக் கூடிய ஒரே கடவுள் அந்த முருகப்பெருமான் தான்.
ராகு கேது கிரகங்கள் சர்ப்ப கிரகங்களாக தான் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. எல்லாம் சரிதான். போராட்டமான இந்த வாழ்க்கையிலிருந்து தப்பிக்க முருகனை எப்படித் தான் கும்பிடுவது எந்த மந்திரத்தை சொல்லுவது. தினமும் தூங்க செல்லும் போது முருகனை மனதார நினைத்துக் கொள்ளுங்கள்.
முருகன் மந்திரம் பழனி முருகனை வடிவமைத்த போகரை குருவாக மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். “ஓம் குருவே போக நாதரே நமஹ” என்ற மந்திரத்தை முதலில் 3 முறை சொல்லிவிட்டு, இந்த போகரை உங்கள் குருவாக நினைத்து ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். முருகா முருகா முருகா என்று மூன்று முறை சொல்லுங்கள்.
பிறகு மயில் வாகனத்தின் மந்திரமான இந்த மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு முருகப்பெருமானை மனதில் நிறுத்தி “ஓம் மயூரபதயே நமோ நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி, தூங்கினால் போதும். உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் அன்றோடு முடிந்துவிடும். விடியக்கூடிய அடுத்த நாள் காலை உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்க வேண்டிய வேலையை அந்த முருகப்பெருமான் பார்த்துக் கொள்வான்.
இரவு நேரத்தில் தான் இந்த ராகு பகவான் கேது பகவான், சனி பகவானின் ஆதிக்கம் எல்லாம் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் முருகனை கும்பிட்டு விட்டு தூங்கினால் உங்கள் வாழ்வில் துன்பமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here