மற்ற தெய்வங்களின் கோவிலுக்கு சென்று வழிபடும் முறையில் இருந்து சிவன் கோவிலுக்கு சென்று வழிபடும் முறை வேறுபட்டதாக இருக்கும். பிரதோஷ வேளையில் எப்படி வலம் வர வேண்டும், மற்ற நாட்களில் எப்படி வழிபட வேண்டும் என விதிமுறை உள்ளது.
அதே போல் சிவனுக்கும், நந்திக்கும் குறுக்கே செல்லக் கூடாது. சண்டிகேஸ்வரரை வணங்கி, கைகளைக் காட்டி விட்டு செல்ல வேண்டும் என்பது போன்ற பல முறைகள் உள்ளது.
இது போல் சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கிருந்து திரும்பும் போது வேறு என்னென்ன விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.சிவன் சொத்து குல நாசம் என்று சொல்வார்கள்.
பிரசாதத்தை தவிர கோவிலில் இருந்து சிறு துரும்பு கூட நாம் கொண்டு வர கூடாது என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதனால் சிறிது நேரம் அமர்ந்து விட்டு உடையில் உள்ள தூசியை கூட தட்டிவிட்டு தான் எழுந்து வர வேண்டும்.
சிவகணங்கள், கோவிலில் இருந்து திரும்பும் போது, கூடவே வராமல் இருப்பதற்காக, சிவன் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து விட்டு வர வேண்டும் என்பார்கள். சிவன் கோவிலில் நவகிரகங்களை சுற்றுவதால் அங்கே உட்காராமல் வந்தால் கிரகங்கள் நம்முடன் கூட வந்து விடும் என சொல்லப்படுகிறது.
அதனால சிவன் கோவிலில் நாம் உட்கார்ந்தால் அதுவும் அங்கேயே உட்கார்ந்து விடும் என நம்பப்படுகிறது.




















