கோலாலம்பூர்:
நாட்டிற்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து மறுசுழற்சி இரும்புகளை கடத்தியதாக நம்பப்படும் கும்பலைச் சுங்கத்துறை தேடி வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் கிள்ளான் மேற்கு துறைமுகத்தில் சுங்கத்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், பதிவு செய்யப்படாத 12 கொள்கலன்களில் 272.6 டன் எடையிலான மறுசுழற்சி இரும்பு பொருட்கள் இருப்பதைக் கண்டறியப்பட்ட்தாக ஜெனரல் (அமலாக்கம்) ரைசாம் செத்தாபா @ முஸ்தபா தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்டவை மறுசுழற்சி இரும்புப்பொருட்கள் என்பதால் SIRIM எனப்படும் தொழில்துறை தரநிலை ஆய்வின் ஒப்புதல் இருக்க வேண்டும் என்றும், சம்மந்தப்பட்ட கொள்கலன்களிலிருந்து மீட்கப்பட்ட இரும்புகள் முறையான ஆவணங்களையும் உரிமங்களையும் கொண்டிருக்கவில்லை என அவர் சொன்னார்.




















