புக்கிட் மெர்தாஜம்:
கடந்த புதன்கிழமை இரண்டு மின்னணு உற்பத்தி தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது, பல்வேறு குடியேற்ற குற்றங்களுக்காக 48 வெளிநாட்டு தொழிலாளர்களை மாநில குடினுழைவுத் துறை கைது செய்தது.
பினாங்கு குடினுழைவுத் துறையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விசா அனுமதி நாட்களுக்கு மேலதிகமாக நாட்டில் தங்கியிருந்தது அல்லது அவர்களை வேலைக்கு அனுமதிக்கப்பட்ட துறையல்லாத துறைகள் அல்லது நிறுவனங்களில் பணிபுரிந்ததன் மூலம் அவர்களின் பணி அனுமதிகளின் விதிமுறைகளை மீறியிருப்பது கண்டறியப்பட்டது.
சோதனையின் போது இரண்டு தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் மொத்தம் 103 வெளிநாட்டினர் பரிசோதிக்கப்பட்டதாக மாநில குடிநுழைவுத் துறை இயக்குனர் சியாம்சுல் ஃபித்ரி அகமட் தெரிவித்தார்.
“20 முதல் 49 வயதுக்குட்பட்ட 48 கைது செய்யப்பட்ட வெளிநாட்டினரும் இந்தோனேசியா, பங்களாதேஷ், நேபாளம், மியன்மார், இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள்” என்று அவர் கூறினார்.
























