17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் நடிகர் கைது

கோலாலம்பூர்:

பெட்டாலிங் ஜெயாவில் 17 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகர்-பாடகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) இங்குள்ள ஒரு ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி அந்த நடிகரை ஏற்கனவே அறிந்திருப்பதாக நம்பப்படுகிறது.

ஏனெனில், சிறுமியை அவர் ஹோட்டலுக்கு அழைத்து வருவதற்கு முன்பு அவர்கள் இருவரும் பலமுறை சந்தித்துள்ளதாக தெரிகிறது.

மேலும் பாடகர் கைது செய்யப்பட்ட பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

இச்சம்பவத்தை புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் புலனாய்வுப் பிரிவு (டி 11) முதன்மை உதவி இயக்குநர் மூத்த உதவி ஆணையர் சித்து கம்சியா ஹாசன் இந்த உறுதிப்படுத்தினார்.

இந்த வழக்கு 2017 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14(a) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here