அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்று தொடங்கி முதலாளிகள் தொழிலாளிகளுக்கிடையிலான வேலை ஒப்பந்தங்கள் stamping செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய் வாரியம் ல். எச்.டி.ன் தெரிவித்துள்ளது.
இது 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும் சுய பரிசோதனை stamp duty அமைப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ல்.எச்.டி.ன் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
முன்பதாக stamp duty தணிக்கை வழிமுறைகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து இவ்வருட ஜனவரி மாதம் தொடங்கி நாடு முழுவதிலும் விரிவான stamp duty தணிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்றும் ல்.எச்.டி.ன் தெரிவித்தது.
அதுமட்டுமின்றி நாடு முழுவதும் நடத்தப்பட்ட தணிக்கை, அமலாக்க நடவடிக்கைகளின் அடிப்படையில் பெருவாரியான வேலை ஒப்பந்தங்கள் 1949 ஆம் ஆண்டு stamp சட்டத்தின் படி stamping செய்யப்படாமலிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதலாளிகளின் சுமையை குறைப்பதற்காக இவருடம் ஜனவரி ஒன்றாம் தேதிக்கு முன்பு செய்யப்பட்ட வேலை ஒப்பந்தங்களுக்கு stamping செய்யப்படுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
எனவேதான் இவ்வாண்டு ஜனவரி 1 தொடங்கி செய்யப்படும் வேலை ஒப்பந்தங்களுக்கு stamp duty கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, 2026 ஜனவரி 1 தொடங்கி செய்யப்படும் வேலை ஒப்பந்தங்களுக்கு stamp duty செய்வதற்கு காலதாமதம் ஆனால் அபராதம் விதிக்கப்படு





















