எரிபொருள் லோரியும் மைவி வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி.

குளுவாங்,

குளுவாங், பத்து பகாட்டிலிருந்து மெர்சிங் செல்லும் சாலையில் 39வது கிலோமீட்டரில் நேற்று இரவு இரவு 9.50 மணியளவில் ஒரு எரிபொருள் லோரியும் புரோடுவா மைவி வகை வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்தானதில் ஒருவர் மணமடைந்தார்.இந்த விபத்தை குளுவாங் மாவட்ட  க் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளனர். விசாரணையில் எரிபொருளை ஏற்றி, ஆயர் ஈத்தாமிலிருந்து குளுவாங் நோக்கிப் பயணித்த லோரியும், குளுவாங் பகுதியைச் சேர்ந்த வியாபாரியான செங் டோவ் கியோங் (வயது 52) என்பருக்கு சொந்தமான புரோடுவா மைவி வாகனமும் விபத்துக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டது.

விபத்தின் போது அந்த வியாபாரி வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் நுழைந்து, எரிபொருள் லோரியினுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. மைவி வாகனம் முன்புறம் முற்றிலும் நசுங்கியதால் வியாபாரியின் தலையிலும் உடலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆனால், எரிபொருள் லோரி ஓட்டுனர் முகமது நஸ்ரி பின் லத்திப் (வயது 39) எந்தவித காயமுமின்றி உயிர்தப்பினார். அவர் ரெங்கிட், ஜோகூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here