எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் அந்த முயற்சிகள் வெற்றி அடையவில்லை, தடைகளுக்கு மேல் தடைகள் வந்து கொண்டே இருக்கிறது, வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தில் தத்தளித்துக்கொண்டு இருக்கிறோம் என்று கூறக்கூடிய ஒவ்வொரு நபருக்கும் அவர்களின் வீட்டில் ஏதாவது ஒரு தீய சக்திகளின் ஆதிக்கம் என்பது இருக்கும். அது கண் திருஷ்டியாகவும் இருக்கலாம், ஏவல், பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்ற எந்தவிதமான தீய சக்தியாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட தீய சக்திகளை விரட்டியடிப்பதற்கு ஒன்பதே ஒன்பது நாள் சிவ அம்சம் பொருந்திய ருத்ராட்சத்தை வழிபாடு செய்தால் போதும்.
அழிக்கும் கடவுளாக கருதப்படுபவர் சிவபெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட சிவபெருமானின் அம்சம் பொருந்திய ஒன்றாக திகழ்வதுதான் ருத்ராட்சம். இந்த ருத்ராட்சத்தை நாம் முழுமனதோடு சிவபெருமானாகவே
கருதி வழிபாடு செய்தோம் என்றால் நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களையும் அது அழிக்கும். அதுவும் வீட்டில் வைத்து இந்த முறையில் வழிபாடு செய்யும் பொழுது அனைத்து விதமான எப்பேற்பட்ட தீய சக்தியாக இருந்தாலும் அவை அனைத்தும் விலகி ஓடும் என்றே கூறலாம்.

ருத்ராட்சம் நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய சக்தி வாய்ந்ததாக திகழ்கிறது. பலரும் தங்களுடைய கழுத்தில் ஐந்து முக ருத்ராட்சத்தை அணிந்திருப்பதை பார்த்திருப்போம். இந்த ருத்ராட்சம் என்பது பல வகைகளில்
கிடைக்கும். ஒரு முக ருத்ராட்சம், இரண்டு முக ருத்ராட்சம் என்று கூறிக் கொண்டே செல்லலாம். ஒவ்வொரு ருத்ராட்சத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. இந்த ருத்ராட்சங்களில் ஏழு முக ருத்ராட்சத்தை சாபம் நீக்கி வாங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த வழிபாட்டை பிரதோஷ நாளில் தான் தொடங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சாபம் நீக்கப்பட்ட ஏழு முக ருத்ராட்சத்தை வாங்கி வந்து பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். பிரதோஷ நாளில் பிரதோஷ நேரமான நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணிக்குள் இந்த ஏழு முக ருத்ராட்சத்திற்கு ஒரு எலுமிச்சம் பழத்தை நன்றாக பிழிந்து அதன் சாறை வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் விலக வேண்டும் சிவபெருமானே என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் கழுவி சந்தனம் குங்குமம் வைத்து பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள்.
பிரதோஷ நாளில் ஆரம்பித்து தினமும் தொடர்ச்சியாக 9 நாட்கள் பிரதோஷ நேரமான நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணிக்குள் எலுமிச்சம் பழச்சாறில் அபிஷேகம் செய்ய வேண்டும். பிரதோஷ நேரத்தில் அபிஷேகம் செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் மாலை 6 மணிக்கு மேல் தங்களுடைய வசதிக்கேற்ப இந்த அபிஷேக வழிபாட்டை செய்யலாம். முடிந்த அளவிற்கு பிரதோஷ நேரத்தை பயன்படுத்தும் பொழுது அதில் அபரிவிதமான சக்தி ஏற்படும். ஒன்பது நாட்கள் நிறைவடையும் பொழுதே வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் தீய சக்திகளும் விலகி ஒரு நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.
சிவபெருமானின் அம்சமாக கருதக்கூடிய ருத்ராட்சத்தை இந்த முறையில் முழுமனதோடும் சிவபெருமானின் மீது முழு நம்பிக்கை வைத்தும் அபிஷேகம் செய்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களை பாடாய்படுத்தக்கூடிய எப்பேர்பட்ட தீய
சக்தியாக இருந்தாலும் அவை விலகி ஓடும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
சக்தியாக இருந்தாலும் அவை விலகி ஓடும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.