கோலாலம்பூர்:
அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் கல்விக் கட்டணத்திற்கான லெவி செலுத்துவதில் ஓராண்டு விலக்கு அளிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை பாலர் பள்ளிகள், தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகள், தொழிற்கல்வி கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து மட்டங்களிலும் உள்ள நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
“இந்த நிறுவனங்கள் தங்கள் வளங்களையும் கற்றல் பொருட்களையும் மேம்படுத்த இது உதவும் என்று கூறிய பிரதமர், எங்கள் குழந்தைகள் சிறந்த பயிற்சியைப் பெறுவதை அரசு உறுதி செய்ய விரும்புகிறது, ஏனெனில் அதுதான் வெற்றிக்கான திறவுகோல்,” என்று அவர் 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய பயிற்சி வாரத்தின் (NTW) தொடக்க விழாவில் கூறினார்.




















