ராமேஸ்வரி ராஜா – படம் : தி. மோகன்
கோலாலம்பூர்:
இண்டா வாட்டர் கன்சோர்ட்டியம் (Indah Water Consortium (IWK) Sdn Bhd) நிறுவனத்தின் 30ஆவது ஆண்டு நிறைவைத் தொடர்ந்து நேற்று 22 ஜூன் 2024 தொண்டு சமூகத் திரையரங்கில் (நஜிஸ் ஜாடி தெமான்) எனும் தொண்டு சமூக நாடகம் அரங்கேற்றப் பட்டது.

இண்டா வாட்டர் கன்சோர்ட்டியம், பந்தாய் டாலாம் மெர்பாவ் ஏகோ பார்க்கில் நடைபெற்ற இக்காட்சி, வயாங் கிச்சன், சோவ் அறக்கட்டளையின் கூட்டு முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ச்டீடிண் ஒச்ஞீடி கூஞுட்ச்ண’ எனும் இந்த நாடகம் முக்கியமான, இன்னும் அடிக்கடி மறக்கப்பட்ட, கழிவுநீர் சுத்திகரிப்பு செயல்முறையின் பயணம், சவால்கள் மூலம் பார்வையாளர்களை அழைத்துச் சென்றது.

நாடகம், நடனம், இசை ஆகியவற்றின் தனித்துவமான கலவையின் மூலம் இந்த தயாரிப்பு கழிவுநீர் ஆலைத் தொழிலாளர்களின் சவால், முக்கியப் பங்கை ஆராய்வதாக இருந்தது.
இப்பணி பெரும்பாலும் அழுக்கு, கடினமான, ஆபத்தானது என்று காட்சியாக சித்திரிக்கப்பட்டது. அதேநேரத்தில் பொதுச் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சரியான சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவும் இருந்தது.

ஐடபள்யூகே தலைமை நிர்வாக அதிகாரி நரேந்திரன் மணியம் கூறுகையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் திறமையான கழிவு மேலாண்மையின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் அதேவேளை யில் தேவைப்படுபவர்களுக்கு எப்போதும் ஆதரவளிப்பதும் எங்கள் முன்னுரிமை என்றார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த நிகழ்ச்சி இண்டா வாட்டரின் முப்பது ஆண்டுகால சேவை, அர்ப்பணிப்பைக் கொண்டாடுவது மட்டுமன்றி பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உள்ளூர் சமூகத்திற்கு நிறுவனத்தின் ஆதரவை நிரூபிக்கவும் உதவுகிறது என்றார்.




















