புக்கிட் மெர்தாஜாம்:
நேற்று இரவு இங்குள்ள ஒரு தொழிலாளர் விடுதியின் வளாகத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, 46 வெளிநாட்டு ஆண்களை போலீசார் கைது செய்தனர்.
நேற்று இரவு இங்குள்ள தொழிலாளர்கள் தங்குமிடமாகப் பயன்படுத்தப்படும் ஒரு ஹோட்டலின் வளாகத்தில் கலவரம் ஏற்பட்டது.
கட்டிடத்தின் வளாகத்தில் அந்நிய தொழிலாளர்கள் குழு ஒன்று கூடியிருப்பதாக பொதுமக்களிடமிருந்து இரவு 10.42 மணிக்குத் தகவல் கிடைத்தது என்று, மத்திய செபராங் பிறை போலிஸ் தலைவர் ஹெல்மி ஹரிஸ் இதனை கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், புக்கிட் மின்யாக் தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு நிறுவனம் இந்தக் கட்டிடத்தை தொழிலாளர் விடுதியாகப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
மேலும் தொழிலாளர்கள் வளாகத்தில் தங்கியிருக்கும் போது சிகரெட் புகைக்கவோ அல்லது மது அருந்தவோ அனுமதிக்கப்படக்கூடாது என்று நிபந்தனை விதித்தது.
நிறுவனத்தின் விதிமுறைகளை மீறிய தொழிலாளர்களிடமிருந்து அபராதம் வசூலித்ததற்காக, வெளிநாட்டைச் சேர்ந்த விடுதி வார்டன் மீது பல தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்ததை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்த நடவடிக்கையால் பல தொழிலாளர்கள் ஒன்றுகூடி கட்டிடத்தின் முன் நிறுவனத்தின் வேனை சேதப்படுத்தினர்.
ஆயுதங்கள் அல்லது ஆபத்தான பொருட்களுடன் கலவரம் செய்ததற்காக அனைத்து ஆண்களும் செவ்வாய்க்கிழமை வரை விசாரணைக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.





















