சைபர்ஜெயா,
புத்ரா ஹைட்ஸ் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட குழாய் வெடிப்பு மற்றும் தீ விபத்துக்கு மேலும் புதிய விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
ஆரம்பம் முதல் இப்போதுவரை மீண்டும் விசாரணை செய்ய தேவையில்லை. அதற்கு இன்னொரு 8 மாதங்கள் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா என அவர் இன்று சைபர்ஜெயாவில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் கூறினார்.
முன்னதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மொத்தம் 212 சாட்சிகள், அதில் மாநில அரசு, உள்ளூராட்சி அமைப்புகள், அருகிலுள்ள நிறுவனங்கள், பாதுகாப்பு காவலர், மற்றும் பெட்ரோனாஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் சாட்சியளித்தனர் என்றும் மாநில அரசு நேரடியாக விசாரணையில் பங்கேற்கவில்லை என்றும், சாட்சியாக மட்டுமே செயல்பட்டதாகவும் அமிருடின் தெரிவித்தார்..
கம்போங் கோலா சுங்கை பாரு குடியிருப்பாளர் நல சங்கம், இந்த வழக்கின் முடிவில் அதிருப்தி தெரிவித்து, மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என கோரியிருந்தது. இதற்கு பதிலளித்த அமிருடின், “விசாரணை முடிவுகள் அரசாங்க அனுமதி கிடைத்த பின்னர் முழுமையாக பொதுமக்களிடம் வெளியிடப்படும்” என உறுதி அளித்தார்.
வெடிப்பு மற்றும் தீ விபத்தில் தவறுகள் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனும் வாக்கப்படுத்தாளுள் “No Further Action (NFA) இது உள்ளடக்கப்பட்டுள்ளது. என்றாலும், புதிய ஆதாரங்கள் வெளிவந்தால், இந்த வழக்கு மீண்டும் திறக்கப்படும் என்று சிலாங்கோர் போலீஸ் தலைவர் ஹுசேன் ஓமர் கான் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



















