எதிர்காலம் குறித்து மலேசியர்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கின்றனர் : Ipsos Populism Report 2025

கோலாலம்பூர்,

மலேசியர்கள் அதிக அளவில் எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் இருக்கத் தொடங்கியுள்ளனர் என்று Ipsos Populism Report 2025 வெளியிட்ட புதிய கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 கணிப்பில் 52% பேர் “நாடு சீரழிந்து வருகிறது” என கூறினர், 2025-இல் இது 40% ஆக குறைந்துள்ளது. இது உலக மக்கள் சராசரியாக நம்பும் 56விழுக்காட்டிற்கும் இற்கும் கீழாக உள்ளது.

மலேசியாவில் “சமூகம் சீர்கெட்டுவிட்டது” என நம்பும் மக்கள் எண்ணிக்கை 3% குறைந்துள்ளது. இதுவும் முழுமையான நாட்டு மனநிலையின் முன்னேற்றத்தை காட்டுவதாக இந்த விபரம் கூறுகிறது.

இந்த மாற்றம், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாட்டில் ஏற்படும் அதிகரித்த சமூக நெருக்கடி எண்ணிக்கைகளுடன் ஒப்பிடுகையில் சிறப்பான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இந்தோனேசியாவில் 68% பேர் சமூக சீர்கேடு குறித்து நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பணக்காரர்களுக்கு பயனுள்ள பொருளாதார அமைப்பு மீதான குற்றச்சாட்டு தொடர்ந்து அதிகரித்துள்ளது.
ஆனால் 67% மலேசியர்கள், பணக்காரர்கள் மற்றும் அதிகாரம் வாய்ந்தவர்களுக்கே பொருளாதாரம் வளைந்து கொடுக்கிறது என்று நம்புவதாக கணிப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 77% பேர், சாதாரண மக்களுக்கும், அரசியல், பொருளாதார ஜாம்பவான்களுக்கும் இடையே தீவிர வேற்றுமை உள்ளது என்று கூறியுள்ளனர். இது கடந்த ஆண்டின் 67% இலக்கைவிட அதிகமாகவே உள்ளது என Ipsos Populism Report 2025 வெளியிட்ட புதிய கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here