கிள்ளான் பள்ளத்தாக்கில் போலி ஆவணங்கள் செய்த இரு கும்பல்களை பிடித்த குடிவரவு துறை

கோலாலம்பூர்,

கிள்ளான் பள்ளத்தாக்கில் நடத்திய இரு தனித்தனி சுற்றிவளைப்புகளில் போலி ஆவணங்களை தயாரித்து வந்த இரண்டு கும்பல்களை மலேசிய குடிவரவு துறை வெற்றிகரமாக கைதுசெய்தது.

ஜூலை 10-ஆம் தேதி மதியம் 12.05 மணியளவில் ஜாலான் புடுவில் உள்ள ஒரு அலுவலகத்தில் நடத்திய முதல் சுற்றிவளைப்பில் மூன்று வங்களாதேச ஆண்கள் (வயது 40 முதல் 50 வரை) கைது செய்யப்பட்டதுடன் 130 வங்கதேச பாஸ்போர்ட் கைப்பற்றப்பட்டதாக மலேசிய குடிவரவு துறை தெரிவித்துள்ளது.

இந்தத் சுற்றிவளைப்பின்போது 130 வங்களாதேச பாஸ்போர்ட்கள், 3 இந்தோனேசிய பாஸ்போர்ட்கள் மற்றும் 3 கைபேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தக் கும்பல் வெளிநாட்டவர்கள் வசம் உள்ள தற்காலிக வேலை அனுமதிப்பத்திரங்களை RM2,500 முதல் RM6,000 வரை வசூலித்து புதுப்பித்து தருவதாகவும் நம்பப்படுகிறது.

மேலும், இந்தக் கும்பல் கடந்த ஒரு ஆண்டாக செயல்பட்டு வந்ததாகவும், கைது செய்யப்பட்ட மூவரும் கட்டுமானத் துறையில் வேலை அனுமதியுடன் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதனிடையே அன்று மாலை 7.09 மணியளவில் அம்பாங் பாருவில் நடத்தப்பட்ட இரண்டாவது சுற்றிவளைப்பில் இரண்டு பாகிஸ்தானியர் மற்றும் ஒரு மியன்மார் நாட்டவர் (வயது 33 முதல் 44 வரை) என இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது பாகிஸ்தான், வியட்நாம், மியன்மார், வங்கதேசம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 5 பாஸ்போர்ட்கள், மலேசிய பாஸ் ஸ்டிக்கர் போலி நகல்கள் 24, மற்றும் 5 கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், பாகிஸ்தானியர் ஒருவரிடம் வேலை அனுமதி இருந்ததும், இன்னொருவர் சட்டவிரோதமாக தங்கியிருந்ததும், மியன்மார் நபரிடம் ஐ.நா அகதிகள் ஆணையத்தின் அடையாள அட்டை இருந்ததும் தெரியவந்தது.

சந்தேகநபர்கள் அனைவரும் மேலதிக விசாரணைக்காக புத்ரஜயா குடிவரவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், விசாரணையை துரிதமாக்குவதற்காக ஒரு வங்கதேச நபருக்கு விசாரணைக்கு ஆ ஜராக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here