மாடு வளர்ப்பு இடங்கள் போதைமருந்து கடத்தல் தற்காலிக நிலையங்களாக பயன்படுத்தியது அம்பலம்

பாசிர் மாஸ்,

கிளந்தான்-தாய்லாந்து எல்லைப் பகுதியில், மாட்டுத் தொட்டிகள், போதைமருந்து கடத்தலுக்கான இடமாக பயன்படுத்தப்படுகிறதென பொதுவான விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் மாட்டுத் தொட்டி உரிமையாளர்கள் அறியாமலோ, மிரட்டலுக்கோ அல்லது லாப நோக்கிலோ நடுப்பணியாளராக மாறும் அபாயத்தில் உள்ளனர் என (GOF) General Operations Force தலைவர் டத்தோ நிக் ரொஸ் அஸ்ஹான் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாசிர் மாஸ், தும்பாட்டில் நடைபெற்ற 6 முக்கிய சுற்றிவளைப்புகளில், RM5 மில்லியன் மதிப்பிலான 35.4 கிலோ ‘பில் குடா’ மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ஒன்று, மாட்டுத் தொட்டியில் சாணத்தில் மறைக்கப்பட்டிருந்தது.

GOF இந்த ஆண்டு, இதுவரை 818 மிருகங்கள் (274 மாடுகள், 526 ஆடுகள்/செம்மறியாடுகள்) கடத்தல் தொடர்பாக 34 வழக்குகளை பதிவு செய்துள்ளது. மேலும் 39 பேரை கைது செய்துள்ளது.

இது குறித்து குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும், எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தப்படும் எனவும் GOF தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here