செர்டாங்
Pusat Bandar Putra Permai பகுதியில் உள்ள நான்கு மாடி அடுக்ககத்தில் செயல்பட்டு வந்த தடைசெய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்ட மையம் நேற்றிரவு மலேசிய குடிநுழைவு துறை, சுபாங் ஜெயா மாநகர சபை மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய சுற்றிவளைப்பின்போது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சூதாட்ட மையம் 3 அபார்ட்மெண்ட் யூனிட்களிலும் செயல்பட்டு வந்ததாகவும் அதிகாரிகள் நுழையும் போது, அவை காலியாக இருந்ததாகவும், சில டாப்லெட்டுகள், கணினி திரைகள், மேசைகள், நாற்காலிகள் மட்டுமே அங்கு இருந்ததாகவும் மலேசிய குடிநுழைவு துறை தெரிவித்துள்ளது.
எனினும், இந்த நடவடிக்கையின்போது மொத்தம் 741 வெளிநாட்டவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், 496 பேர் தங்களிடம் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாததால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் Immigration Act 1959/63, Passport Act 1966, மற்றும் Anti-Trafficking in Persons and Anti-Smuggling of Migrants Act 2007 ஆகிய சட்டங்களின் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.
சிலாங்கூரில் இத்திட்டம் ஷா ஆலம், கெலானா ஜெயா, போர்ட் கிளாங், காஜாங் ஆகிய நான்கு இடங்களில் செயல்படுத்தப்படுகிறது.
சட்டத்துக்கு விரோதமான சூதாட்டங்களும், அனுமதியில்லா குடியிருப்பாளர்களுக்கும் எதிராக நடவடிக்கைகள் தொடரும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே PRM 2.0 என்ற திரும்ப அனுப்பும் திட்டமும் தற்போது செயல்பாட்டில் உள்ளதால் சட்டவிரோத குடியேறிகள் RM520 மட்டும் செலுத்தினால் தங்கள் நாடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















