மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியை (மூடா) 14 நாட்களில் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு; சையத் சாதிக் தகவல்

பெட்டாலிங் ஜெயா டிசம்பர் 14 :

மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியை (மூடா) இரண்டு வாரங்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்துக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் தனக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளதாக மூடா நிறுவனர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் டுவிட்டர் தளத்திலுள்ள தனது கணக்கின் மூலம் அறிவித்துள்ளார்.

“நீதிபதி எங்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளார். மூடாவை 14 நாட்களுக்குள் பதிவு செய்வதுடன் சட்டச் செலவு 10,000 வெள்ளியை செலுத்துமாறு உள்துறை அமைச்சருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

சையத் சாதிக் மற்றும் 12 பேர், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் மற்றும் சங்கங்களின் பதிவாளர் (ஆர்ஓஎஸ்) ஆகியோரின் முடிவை எதிர்த்து மூடாவை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான அவர்களின் முறையீட்டை நிராகரித்து குறுக்கு மேன்முறையீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here