பினாங்கில் RM 2.2 மில்லியன் மதிப்புள்ள MDMA போதைப்பொருள் பறிமுதல்

ஜார்ஜ்டவுன்:

பினாங்கில் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் போராட்டத்தில். ஒரு முக்கிய வெற்றியை காவல்துறை பெற்றுள்ளது என பினாங்கு மாநில காவல்துறைத் தலைவர் துணைக் காவல் ஆணையர் டத்தோ’ முஹமட் அல்வி பின் சைனல் ஆபிடின் தெரிவித்துள்ளார். பினாங்கு காவல்துறை தலைமையக ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர், RM 2.2 மில்லியன் மதிப்புள்ள மெதிலைன் டையோக்சி மெத்தாம்ஃபெட்டமின் (MDMA) எனும் கடுமையான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்த அதிரடி நடவடிக்கை பினாங்கு மாநில போதைப்பொருள் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் (JSJN) முன்னெடுக்கப்பட்டது. இது மாநில காவல்துறையின் அர்ப்பணிப்பு மற்றும் தீவிர முயற்சியின் ஒரு வெளிப்பாடாகும் என டத்தோ’ முஹமட் அல்வி தெரிவித்தார். இந்த நடவடிக்கையின் வெற்றி, காவல்துறையின் நுட்பமான உளவுத்தகவல் சேகரிப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு பணிகளை எடுத்துக்காட்டுகிறது என அவர் கூறினார்.

இந்த வெற்றி, போதைப்பொருள் குற்றங்களை முழுமையாக ஒழிக்க அரசு மற்றும் மலேசிய காவல்துறை எடுத்துள்ள உறுதியான நடவடிக்கைகளின் ஓர் முக்கிய அடையாளமாகும். இது, போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு ஒரு கடும் எச்சரிக்கையாகவும், பினாங்கு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகிறது. காவல்துறை எதிர்காலத்திலும் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here