குவாந்தான்
குவாந்தான் 188 பெருவிழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட BASE Jump Extreme Challenge நிகழ்வில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் காயமடைந்தார், இருவர் பாதிப்பின்றி மீட்கப்பட்டனர்.
சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் நிகழ்ந்ததாகவும், 62 வயதான ஜெய்னல் சிக் என்பவர் குவாந்தான் 188 கோபுரம் அருகே உள்ள கான்கிரீட் பகுதியில்தான் தரையிறங்கியதாகவும் இது குறித்து மாவட்ட காவல்துறை ஆணையாளர் மொகமட் அட்லி மாட் தாவுத் கூறினார்.
அவர் உடனடியாக தெங்கு அம்புவான் அப்ஸான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 35 வயதான ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ மோர்கோம் ஒரு மரத்தில் இறங்கிய நிலையில், 64 வயதான மலேசிய வீரர் மனன் மகுசின் ஆற்றில் இறங்கியதாகவும், அவர்கள் இருவரும் பாதிப்பின்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“நிகழ்வை ஏற்பாடு செய்த குழு மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்தோர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்,” என்றும் போலீசார் தெரிவித்தனர்.




















